16th February 2023 20:00:57 Hours
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பகம் மற்றும் மக்கள் வங்கி நாரஹேன்பிட்டி கிளையுடன் இணைந்து 2023 பெப்ரவரி 01 முதல் பெப்ரவரி 14 வரையிலான காலப்பகுதியில் குழந்தைகளை பிரசவித்த தாய்மார்களுக்கு தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு பணமும் பரிசுப் பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
அதன்படி இராணுவ பெற்றோருக்கு பிறந்த 14 பேருக்கு தலா ரூ. 2000.00 புதிய வங்கி வைப்புத் தொகையும் ரூ. 10,000.00 பொறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதியும் பெப்ரவரி 2 ஆம் திகதி கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது.
கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் முகாமைத்துவ மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் பிரிகேடியர் ஜானக விதானச்சி மற்றும் நாரஹேன்பிட்டி மக்கள் வங்கியின் முகாமையாளர் திருமதி டபிள்யூ.ஏ.என் பியசீலி ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டு தாய்மார்களுக்கு பரிசில்களை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் பணிப்பாளர் கேணல் சமந்த குமாரகே, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.