04th July 2023 19:48:09 Hours
இலங்கை இராணுவ மகளீர் படையணி தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கை இராணுவ மகளிர் படையணியின் அதிகாரிகளுக்கான 2023 ஆண்டுக்கான இரண்டாம் காலாண்டு பயிற்சி நாள் 28 ஜூன் 2023 அன்று பனாகொட பொறியியல் சேவை படையணி தலைமையகத்தில் இராணுவ சிரேஸ்ட அதிகாரிகள்/அதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.
இலங்கை இராணுவ மகளிர் படையணியின் படைத் தளபதியும் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் யுடி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆர்சிடிஎஸ் பீஎஸ்சி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இது நடத்தப்பட்டது. பிரிகேடியர் ஜேகேஆர் ஜெயக்கொடி ஆர்டப்ளியுபீ யுஎஸ்பீ அவர்கள் மகளீர் படையணியின் அதிகாரிகளின் படைப்பிரிவு, தொழில்முறை, மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் பொதுவான தரத்தை மேம்படுத்தும் திட்டத்தை மேற்பார்வையிட்டார்.
முதலாவது சிறப்புப் படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜேடிபீகேபீ அல்விஸ் அவர்களால் “பெண்மையின் தத்துவம் மற்றும் பெண்களின் வகிபங்கு - சமநிலை சமூகத்திற்கான நீதி” என்ற தலைப்பிலான விரிவுரையுடன் அன்றைய நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. சுயாதீன ஆலோசகரான மகளீர் படையணியின் ஓய்வு பெற்ற சிரேஸ்ட அதிகாரியான லெப்டினன்ட் கேணல் கேஎம் முத்தலிப் (ஓய்வு) பயிற்சி நாள் நிகழ்ச்சியின் இரண்டாவது அமர்வாக பயனுள்ள விரிவுரையினை நடத்தினார். உளவியல் ஆலோசகர் திருமதி பாக்யா அபேசிங்க அவர்கள் “காதல் முக்கோணத்திற்கு அப்பாற்பட்ட பெண்கள்” என்ற தலைப்பில் பயனுள்ள விரிவுரையை நிகழ்த்தினார்.
மூன்றாவது சிறப்புப் படையணி கட்டளை அதிகாரியான லெப்டினன்ட் கேணல் எஸ்எம்என்கேபி செனவிரத்ன ஆர’டப்ளியுபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சி அவர்களால் அறிவை மேம்படுத்துவதற்காக “இலங்கை கலாசார வரலாறு” என்ற தலைப்பில் இரவு அமர்வில் விரிவுரை நடத்தப்பட்டது.அந்த அமர்விற்கு மேலதிகமாக முதலதம் இராணுவ மகளீர் படையணி கட்டளை அதிகாரி மேஜர் டீடீகேகே பெர்னாண்டோ பீஎஸ்சி அவர்கள் படையணி தலைமையகத்தின் எதிர்கால திட்டங்கள் மற்றும் அதிகாரிகள் பாடநெறிகளின் முக்கியத்துவம் பற்றி விளக்கமளித்தார்.