சமகாலத்தில் இலங்கை இராணுவத்தால் இதுவரை உருவாக்கப்பட்ட மிகச் சிறந்த போர் வீரர்களில் ஒருவரான லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவவின் 24 வது நினைவு தினம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 8) அனுஷ்டிக்கப்பட்டது. மறைந்த புகழ்பெற்ற போர் வீரரின் துணைவியார் திருமதி லலி கொப்பேகடுவ மற்றும் அவரது படையணியான இலங்கை கவச வாகனப் படையணி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்ட பல நினைவு நிகழ்ச்சிகள் அனுராதபுரத்திலும் பிற இடங்களிலும் நாள் முழுவதும் நடைபெறறன.
மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன்ட் கேணல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன்ட் கேணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன்ட் கேணல் வை.என்.பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன்ட் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன்ட் கமாண்டர் சி.பி.விஜேபுர மற்றும் சிப்பாய், டபிள்யூ.ஜே. விக்கிரமசிங்க ஆகியோர் யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் 1982 ஆகஸ்ட் 8 ம் திகதி இல் புலிகளின் கண்ணிவெடியில் பலியானார்கள்.