Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th August 2024 19:18:40 Hours

போர் பயிற்சி பாடசாலையில் ‘கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி - 104 இன் சான்றிதழ் வழங்கல்

அம்பாறை போர்ப் பயிற்சிப் பாடசாலையின் கனிஷ்ட பயிற்றுவிப்பாளர் பாடநெறி - 104’ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு 05 ஆகஸ்ட் 2024 அன்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் போர் பயிற்சி பாடசாலையின் தளபதி மேஜர் ஜெனரல் டிஆர்என் ஹெட்டியாராச்சி ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இராணுவத்தின் வெவ்வேறு படையணிகளை சேர்ந்த மொத்தம் 44 அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மூன்று மாத காலப் பயிற்சியைப் நிறைவு செய்தனர். இப் பாடநெறியில் 1 வது இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் கேஎம்எஎன் கருணாதிபதிக்கு பாடநெறியின் சிறந்த மாணவிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

பரிசு வழங்கும் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.