Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th December 2023 19:57:50 Hours

போர் பயிற்சி கல்லூரியில் ‘தலைமைத்துவ’ பாடநெறி நிறைவு

அதிகாரவணையற்ற அதிகாரிகளின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் 'தலைமைத்துவம்' பற்றிய விசேட பாடநெறி அம்பாறை போர் பயிற்சி கல்லூரியில் 20 நவம்பர் 2023 முதல் டிசம்பர் 08 வரை நடைபெற்றது.

இராணுவத்தின் பல படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 75 அதிகாரவாணைற்ற அதிகாரிகள் பாடநெறியை பின்பற்றினர். பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்குவதற்கு முன் அம்பாறை போர் பயிற்சி கல்லூரியின் கட்டளை அதிகாரி கேணல் எம்.கே.ஏ.டி சந்திரமால் இறுதி உரையினை ஆற்றினார்.

4 வது விஷேட படையணியின் கோப்ரல் எச்.பீ.ஜி.ஆர் திசாநாயக்க பாடநெறியில் சிறந்த மாணவராக விருது பெற்றார். நிறைவு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.