Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th August 2023 00:45:11 Hours

போதகரின் வேண்டுகோளுக்கிணங்க 52 வது படைப்பிரிவினால் மிரிசுவிலில் புதிய வீடு

52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் சமூகம் சார்ந்த செயற்திட்டத்திற்காக மேலும் ஒரு முன்முயற்சியை மேற்கொண்டு மிரிசுவிலில் தகுதியான குடும்பம் ஒன்றுக்கான புதிய வீடொன்றை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை புதன்கிழமை (ஆகஸ்ட் 02) நாட்டினார்.

தந்தை விட்டு சென்ற ஆதரவற்ற குடும்பத்தின் தாய், மூன்று பெண் குழந்தைகளுடன் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார், தற்போது நிரந்தர வருமானம் இன்றி தென்னை ஓலையால் ஆன வீட்டில் வசித்து வருகின்றனர். இரண்டு இளைய மகள்மார் இன்னும் பாடசாலையில் படிக்கையில் அவர்களது மூத்த மகள் செய்யும் சாதாரண வேலையின் மூலம் வரும் வருமானத்திலே வாழ்கின்றனர்.

மிரிசுவிலில் வசிக்கும் ஆயர் அருட்தந்தை அனிஸ்டன் அன்ட்ரூ அவர்கள் குடும்பத்தின் அவல நிலையைப் பற்றி இராணுத்தினரின் கவனத்திற்குக் கொண்டு வந்ததுடன், சம்பந்தப்பட்ட தரப்பினருடன் ஒருங்கிணைந்து பூர்வாங்க ஏற்பாடுகளை இராணுவம் ஆரம்பித்தது.

‘'இரக்கத்தை கற்பனை செய்து பாருங்கள்' எனும் அமைப்பு படையினருக்கு தேவையான மூலப்பொருட்களை வழங்கியதுடன், 523 வது காலாட் பிரிகேடின் 11 வது இராணுவ களப் பொறியியல் படையணி தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் மனித வளத்தை பயன்படுத்தி புதிய வீட்டை நிர்மாணிக்கும் பணியை மேற்கொண்டது.

அடிக்கல் நாட்டு விழாவில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், குடும்பத்தினர் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.