05th February 2024 19:32:12 Hours
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ, பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியும் நிதி முகாமைத்துவப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமுமான மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, ஹபரகட பொறியியல் சேவைகள் படையணியின் மத்திய பணிமனையில் விடுமுறை விடுதி ஒன்று நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 2024 ஜனவரி 30 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த விடுமுறை விடுதி மருத்துவ சேவைகளுக்காக வருகை தரும் அதிகாரிகள், வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தங்கும் வசதிகளை வழங்குவதுடன், கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள பனாகொட வளாகம், முகாம்கள் மற்றும் ஏனைய வசதிகளில் இருந்து அவர்களின் நிர்வாக தேவைகளை நிவர்த்தி செய்துக் கொள்வதற்கான வசதிகளை வழங்கும் நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.