Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st January 2025 15:21:07 Hours

பொறியியல் சேவைகள் படையணியினால் போதைப்பொருள் தடுப்பு பற்றிய விரிவுரை

பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் கேஏஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பொறியியல் சேவைகள் படையணி 26 டிசம்பர் 2024 அன்று போதைப்பொருள் தடுப்பு பற்றிய விரிவுரையை நடாத்தியது. இராணுவத்தினரிடம் போதைப்பொருள் பாவனை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

கொழும்பு மாவட்டத்திற்கான தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் இணைப்பாளர் திருமதி துல்ஷானி தாரக மஹானாம அவர்கள் விரிவுரையை நடாத்தியதுடன், இலங்கையில் போதைப்பொருள் பாவனையை எதிர்ப்பதற்கான சவால்கள் குறித்த பெறுமதியான நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

இராணுவத்தினுள் போதைப்பொருள் இல்லாத வாழ்க்கை முறையை ஊக்குவிக்கும் வகையில், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட 300 பங்கேற்பாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.