Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th July 2024 18:37:38 Hours

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையரின் வருடாந்த பொதுக்கூட்டம்

பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உதிதா பெரேரா அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ், வருடாந்த பொதுக் கூட்டம் 06 ஜூலை 2024 அன்று பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சி நிரலுக்கு இணங்க, பொறியியல் சேவைகள் படையணி சேவை வனிதையர் பிரிவின் செயலாளர் திருமதி ஜயனி விரசிங்க முந்தைய கூட்டத்தின் அறிக்கையை வாசித்ததுடன் பின்னர் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்பின், எதிர்காலத்தில் திட்டமிடப்பட்ட வேலைத்திட்டங்கள் மற்றும் ஒரு வருடத்திற்குள் நடத்தப்பட்ட நலன்புரி நடவடிக்கைகளின் பின்னூட்டல் காண்பிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் கெஸ்மெடிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் குழுவினரால் "தனியாள் அலங்காரம்" என்ற தலைப்பில் ஒரு பட்டறை நடைபெற்றது.

குழு படத்துடன் நிகழ்வுகள் நிறைவுற்றன.