Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2024 13:06:14 Hours

பொறியியல் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு தகுதி சின்னம்

இலங்கை பொறியியல் படையணியினரால் திறமையை மேம்படுத்தும் பாடநெறிகளை வெற்றிகரமாக முடித்த 56 அதிகாரிகள் மற்றும் 87 சிப்பாய்களை கௌரவிக்கும் நிகழ்வு 2024 ஏப்ரல் 30 ம் திகதி இடம்பெற்றது. இந்த பாடநெறிகளில் அதிகாரிகளின் வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை அகற்றல் 1/2024, வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை அகற்றல் பயிற்சி இல -07 (சிப்பாய்), அதிகாரி உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி பயிற்சி 1/2024 ,அதிகாரிகள் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் முகாமை பாடநெறி 1/2024, மற்றும் மனிதாபிமான கண்ணிவெடி அகற்றல் அடிப்படை பாடநெறி எண். 44 (சிப்பாய்கள்) போன்றனவாகும்.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை இராணுவத்தின் தொண்டர் படையணியின் தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் கலந்துகொண்டதுடன், படையணியின் பேரவை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.

அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் முதல் இடத்தைப் பெற்றவர்களின் விபரம் பின்வருமாறு.

கெப்டன் எச்.ஏ.ஆர்.எல் ஹிதெல்லராச்சி - (வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை அகற்றல்) (அதிகாரி), 1/2024

லான்ஸ் கோப்ரல் ஜே.ஏ.ஐ.எஸ் ஜயசேகர – (வெடிகுண்டு மற்றும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களை அகற்றல்) பாடநெறி எண். 07 (சிப்பாய்)

கெப்டன் எஸ்.எச் ரொட்ரிகோ- உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி பயிற்சி பதில் பாடநெறி 1/2024 (அதிகாரி)

கெப்டன் எஸ்டிபீடி பிரேமரத்ன – உயிரியல் கதிரியக்க மற்றும் அணுசக்தி பயிற்சி பாடநெறி 1/2024 (அதிகாரி)

சப்பர் எஸ்.ஏ.பீ லஹிரு – மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் அடிப்படை பாடநெறி எண். 44 (சிப்பாய்)