Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

பொதுநலவாய போர் வீரர்கள் நினைவு விழா

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வாவை பிரதிநிதித்துவப்படுத்தி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் உபய மெதவெல இன்று (11) பிற்பகல் கொழும்பு 5 ஜாவத்தையிலுள்ள பொதுநலவாய போர் நினைவுச் சின்னத்தில் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'நினைவு அனுஸ்டிப்பு நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் பொதுநலவாய போர் நினைவுக் குழு இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தல், பொதுநலவாய நாடுகளில் உலகப் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் முன்னெடுக்கப்படுகின்றது. நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரித்தானியாவுக்கான உயர் ஸ்தானிகர் கௌரவ ஜேம்ஸ் டௌரிஸ், பொதுநலவாய போர் நினைவு ஆணையத்தின் பிரதிநிதிகள், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படைகளின் பதவி நிலைப் பிரதானிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உலகப் போரின் போது இலங்கையில் இறந்த பொதுநலவாய நாடுகளின் மொத்தம் 1,999 போர் வீரர்கள், தலைநகர் கொழும்பில் உள்ள இருவர் உட்பட, நாடு முழுவதும் வெவ்வேறு நினைவு அனுஸ்டிப்புகளில் பொதுநலவாய போர் நினைவு ஆணையத்தால் நினைவுகூரப்பட்டனர்.

லிவரமெண்து (ஜாவத்தை) நினைவு தூபியில் 346 பொதுநலவாய படைவீரர்கள் மற்றும் நெதர்லாந்தைச் சேர்ந்த ஒரு படைவீரரின் பெயரைக் கொண்டுள்ளது. மற்றொன்று, அதே இடத்தில் இந்து மதத்தின் 165 படைவீரர்களின் நினைவாக உள்ளது.

இலங்கையில் ஆறு பொதுநலவாய போர் மயானங்களும், கொழும்பில் நான்கும், மலையகத் தலைநகர் கண்டியில் ஒன்றும், திருகோணமலையில் ஒன்றும் உள்ளன. மற்ற பொதுநலவாய போரில் உயிரிழந்தவர்கள் ஜாவத்தை கல்லறை, குப்பியவத்தை முஸ்லிம் கல்லறை, கண்டி சிவில் கல்லறை, கண்டியில் உள்ள ஜோர்ஜ் ஈ. டி சில்வா பூங்கா மற்றும் நுவரெலியா புனித திரித்துவ தேவாலயத்தில் உள்ளன.