Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th February 2025 14:55:19 Hours

பொண்டெராவினால் வழங்கப்பட்ட நன்கொடை இராணுவ சேவை வனிதையிரால் இராணுவ அமைப்புக்களுக்கு வழங்கல்

பொண்டெரா பிராண்ட்ஸ் லங்கா நிறுவனம் இராணுவ சேவை வனிதையர் பிரிவிக்கு 25,000 எங்கர் நியூடேல் வாம் பானங்களை நன்கொடையாக வழங்கியது. இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுவேந்திரினி திசாநாயக்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அந்த பானங்கள் இலங்கை இராணுவத்தின் பணிப்பகங்கள், பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள், பயிற்சிப் பாடசாலைகள், படையலகுகள் மற்றும் விரு கெகுலு பாலர் பாடசாலைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுக்கு வழங்கப்பட்டன.

'தூய இலங்கை' திட்டத்தில் ஈடுபட்டுள்ள இராணுவம் மற்றும் சிவில் பணியாளர்களை ஆதரிக்கும் நோக்கத்துடன் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.