02nd August 2024 21:10:12 Hours
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் உளவியல் துறையின் இரண்டாம் வருட மாணவர்களுக்கான நடைமுறைப் பயிற்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2024 ஜூலை 29 ஆம் திகதி 1 வது இலங்கை இராணுவ ரைப்பிள் விரிவுரை மண்டபத்தில் ஒரு நாள் உளவியல் செயலமர்வு நடைபெற்றது.இந்தப் பட்டறை எதிர்காலத்தில் ஓய்வு பெறவிருக்கும் இராணுவ படையினரின் வெற்றிகரமான ஓய்வு வாழ்க்கைக்கு தயார்படுத்துவதை நோக்கமாகக் நடாத்தப்பட்டது.
மத்திய பாதுகாப்பு படை தலைமையக தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் இச்செயலமர்வு நடத்தப்பட்டது. 11 வது காலாட் படைப்பிரிவின் 37 படையினர் இந்த செயலமர்வில் கலந்துகொண்டனர்.