Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th May 2020 16:30:15 Hours

பெலாரஸில் வசிக்கும் இலங்கையர்கள் நள்ளிரவில் நாடு திரும்புகின்றனர்

இலங்கை விமானம் சேவைக்கு சொந்தமான யுஎல் 1206 விமானம் ஊடாக நள்ளிரவில் 28 ஆம் திகதி பெலாரஸிலிருந்து கொழும்புக்கு 271 மாணவர்கள் மற்றும் அரச அதிகாரிகள் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் அனைவரும் இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தும் மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். என் கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் இராணுவத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களான கோல்ட் சாண்ட் ஹோட்டல் (28) பேரும், தியகம ஐடியூம் (1) பேரும், நிபுன பூச (3) பேரும் மற்றும் ருவல (1) பேரும் என மொத்தம் 33 பேர் இன்று (28) தனிமைப்படுத்தலின் பின்பு பீசிஆர் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ சான்றிதழ் வழங்கி தங்களது வசிப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுவரை 11040 பேர் தனிமைப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளர்.

இன்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் முப்படையினரால் நிர்வகிக்கப்பட்டும் 44 தனிமைபடுத்தும் நிலையங்களில் 4836 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர். இன்று 28ம் திகதி வரை மொத்தம் 682 கடற்படை வீரர்கள் கொவிட் 19 வைரஸ் தாக்கத்தில் உள்ளாகி உள்ளனர். கடந்த 24 மணித்தியாலயங்களில் மட்டும் 53 கடற்படை வீரர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளனர். 351 பேர் முழுமையாக சுகமடைந்து வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் 331 கடற்படையினர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். latest Nike release | Men’s shoes