Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th August 2023 06:00:47 Hours

பெரிய பச்சப்பள்ளியில் பரவிய தீ அணைப்பு

யாழ்ப்பாணம் பச்சப்பளை பொதுப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 01) வறண்ட காலநிலை காரணமாக வேகமாக பரவி வந்த பற்றை தீயை 522 வது காலாட் பிரிகேட் படையினர் அணைத்துள்ளனர்.

ஒரு அதிகாரி உள்ளிட்ட இராணுவ வீரர்கள் அந்த இடத்திற்கு, தகவல் கிடைத்ததும் வேகமாக விரைந்து சென்று ஏனைய பகுதிகளுக்கு பரவும் முன் தீயை சிறிது நேரத்தில் அணைத்தனர்.

இப்பணியை 52 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 522 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் எல்கேடி பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆகியோரால் மேற்பார்வையிடப்பட்டது.