07th August 2023 19:30:50 Hours
லெபனானில் உள்ள இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த ‘இலங்கைத் தூதுவர் கிரிக்கெட் போட்டி - 2023’ ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 23) பெய்ரூட் புனித ஜோசப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் தூதரகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொத்தம் 12 அணிகள் மற்றும் லெபனானில் வசிக்கும் இலங்கையர்களின் 07 அணிகள் உட்பட ஐக்கிய நாடுகளின் லெபனான் இடைக் காலப் படையணியில் உள்ள 14 வது இலங்கை பாதுகாப்பு படை குழுவின் அணி உட்பட மொத்தம் 12 அணிகள் போட்டியிட்டன.
14 வது இலங்கை பாதுகாப்பு படை நிறுவனத்தின் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் போட்டியில் போட்டியிட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் வழமை போன்று தமது ஆற்றல் மிக்க மற்றும் அபாரமான விளையாட்டுத் திறன்களை வெளிப்படுத்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றதுடன், 14 வது இலங்கை பாதுகாப்பு படை குழுவின் கிரிக்கெட் அணியை மேஜர் என் மான்னகே மற்றும் கெப்டன் எஸ் திஸாநாயக்க ஆகியோர் வழிநடத்தினர்.
லெபனானில் வாழும் வெளிநாட்டு சமூகத்தினரிடையே கூட்டுறவை மேம்படுத்தும் நோக்கில், சமூக நலன்புரி திட்டத்தின் ஒரு பகுதியாக ஆண்டுதோறும் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட லெபனானுக்கான இலங்கை தூதுவர் கபில சுசந்த ஜயவீர அவர்கள் வெற்றியீட்டிய அணிக்கு பதக்கங்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களை இறுதியாக வழங்கினார்.
பங்கேற்கும் அணிகளின் அனைத்து தூதர்கள், 14 வது இலங்கை பாதுகாப்பு படை குழுவின் குழுத்தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகளும் போட்டியை கண்டுகளித்தனர்.