Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th December 2024 13:58:07 Hours

புனித சிவனொளிபாதமலையில் அம்பலத்தை புதுப்பிக்கும் பணி நிறைவு

19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினருடன் பொறியியல் சேவைகள் படையணி படையினர் இணைந்து புனித சிவனொளிபாதமலை சீதகங்குல பகுதியில் அமைந்துள்ள அம்பலத்தை புனரமைக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவுசெய்தனர். இந்தத் திட்டம் 19 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி பதில் கட்டளை அதிகாரி மேஜர் எச்ஜிகேஎச் குணரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.

சிவனொளிபாதமலையில் யாத்திரை காலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு தற்காலிக ஓய்வு வசதியாக விளங்கும் அம்பலம், மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வைஏபிஎம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சி அவர்களால் உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 642 வது காலாட் பிரிகேட் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.