Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th February 2025 18:55:13 Hours

புனானி படையலகு பயிற்சி பாடசாலை மற்றும் 7 வது இலேசாயுத இலங்கை பீரங்கிப் படையணி இணைந்து சிரமதானம்

இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் 'தூய இலங்கை' திட்டத்தின் கீழ், புனானி படையலகு பயிற்சிப் பாடசாலை மற்றும் 7 வது இலேசாயுத இலங்கை பீரங்கிப் படையணி ஆகியவை சுதந்திர தினத்தை முன்னிட்டு 2025 பெப்ரவரி 04 அன்று ஒரு துய்மையாக்கும் திட்டத்தை மேற்கொண்டன.

இந்த நிகழ்ச்சித் திட்டம் 7 வது இலங்கை பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் புனானி படையலகு பயிற்சிப் பாடசாலையின் கட்டளை அதிகாரி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடத்தப்பட்டது.

புனானி படையலகு பயிற்சிப் பாடசாலை மற்றும் 7 வது இலங்கை பீரங்கி படையணியின் படையினர், குப்பைகளை அகற்றுதல் மற்றும் வீதியோரத்தை சுத்தம் செய்வதில் கவனம் செலுத்தி புனானி பிரதேசத்தை (ஏ-11 வீதி) சுத்தம் செய்தனர். இந்த முயற்சி 60 இராணுவ வீரர்களின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டது.

சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.