Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th August 2023 21:44:52 Hours

புனர்வாழ்வு பணிப்பாளர் ‘அபிமன்சல - 1’ போர் வீரர்களை சந்திப்பு

புனர்வாழ்வு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் எஸ்சி ஏக்கநாயக்க ஆர்எஸ்பீ 2023 ஜூலை 29 அன்று அனுராதபுரம் 'அபிமன்சல - 1' க்கு விஜயம் செய்தார். மே 2009 க்கு முன்னர் புலிகளின் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் புனர்வாழ்வு மற்றும் நிரந்தர காயங்களுக்கு உள்ளான போர்வீரர்களின் நலம் குறித்து விசாரிக்கும் நோக்கத்துடன் விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

வருகை தந்த பணிப்பாளர் அந்த போர்வீரர்களுடன் உரையாடிய பின்னர், அவர்களின் புனர்வாழ்வு நடைமுறைகள் தொடர்பான சிக்கல்களை தீர்க்க புனர்வாழ்வு பணிப்பகத்தின் முழு ஒத்துழைப்பும் கிடைக்கும் என உறுதியளித்தார்.

அவர் அங்கு வசிக்கும் போர் வீரர்களுக்கு பரிசுப் பொதிகளை வழங்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துடன், அன்றைய நிகழ்வில் ‘அபிமன்சல - 1’ல் தளபதி மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.