26th June 2024 21:49:39 Hours
வவுணாதீவு - கன்னக்குடா பிரதேசத்தில் வசிக்கும் 43 வயதுடைய புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான பீ வசந்தன் 19 ஜூன் 2024 அன்று காலமானார். அவரது இறுதிக்கிரியைகள் 20 ஜூன் 2024 அன்று கன்னக்குடா பிரதேசத்தில் நடைபெற்றது.
வெற்றிகரமாக புனர்வாழ்வளிக்கப்பட்ட வசந்தன், புனர்வாழ்வுக்குப் பின்னரான சமூக ஆதரவு மற்றும் நல்லிணக்க முயற்சிகளில் மிகுந்த அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளார்.
கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்ஏ குலதுங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், 243 வது காலாட் பிரிகேட் மற்றும் 11 வது (தொ) இலங்கை சிங்கப் படையணியின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இறுதி கிரியைகளில் கலந்துக் கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.