17th April 2025 16:05:24 Hours
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தேநீர் விருந்து மற்றும் சுமூகமான ஒன்றுகூடல் நிகழ்வு இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை (2025 ஏப்ரல்16) காலை இடம் பெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
நிகழ்விடத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் எம்.ஜீ.டபிள்யூ.டபிள்யூ.டபிள்யூ.எம்.சீ.பி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் இராணுவத் தலைமையகத்தின் அனைத்து முதன்மை பதவி நிலை அதிகாரிகளும் அன்புடன் வரவேற்றனர்.
புத்தாண்டு நிகழ்வின் ஆரம்பத்தை குறிக்கும் வகையில் பிரதம அதிதி சிரேஷ்ட அதிகாரிகளுடன் மங்கல விளக்கேற்றியதை தொடர்ந்து கலந்து கொண்டவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்து சுமுகமான உரையாடினார்.
இந்நிகழ்வில் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் பணியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.