25th June 2024 07:54:13 Hours
பொசன் போயா தினத்தை முன்னிட்டு, புத்தங்கல விகாரையில் 2024 ஜூன் 21 முதல் 23 வரை விகாரையின் பொருட் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட செயலக அலுவலகத்தின் வழிகாட்டல் மற்றும் 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.எல்.ஏ.சி பெரேரா ஆர்டபிள்யூபீ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ அவர்களின் மேற்பார்வையின் கீழ் இது நடைபெற்றது.
2024 ஜூன் 22 அன்று, 24 வது காலாட் படைப்பிரிவு தளபதி பொது வெளிப்பாட்டிற்கான சிறப்பு மன்றத்தில் நினைவுச்சின்னங்களை பிரதிஸ்டைச் செய்தார். கண்காட்சியின் போது கலந்து கொண்ட பௌத்த பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது. மேலும், விகாரைக்கு வருகை தரும் பக்தர்களுக்கு குளிர்பான தானமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.