24th October 2023 10:40:12 Hours
68 வது காலாட்படைப்பிரிவின் 3 வது (தொ) விஜயபாகு காலாட் படையணி மற்றும் 9 வது தேசிய பாதுகாவலர் படையினரால் ஒக்டோபர் 19 புதுக்குடியிருப்பு மற்றும் சுதந்திபுரம் பகுதிகளில் உள்ள மூன்று குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகளுக்கு 14 ஆண்டு காலப்பகுதியில் கைவிடப்பட்ட நெல் வயல்களை பயிர்செய்கைகாக உழுது தயார் செய்துகொடுத்தனர்.
விவசாயிகள் உழவு, நெல் விதை மற்றும் நிதி நெருக்கடியால் கைவிட்பட்டிருந்த வயல் நிலங்களை படையினர் நெல் விதை, நிதி மற்றும் மனித வழங்களை வழங்கி உதவி செய்தனர்.
68 வது காலாட்படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ் கஸ்தூரிமுதலி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இத் திட்டம் முன்னெடுக்கபட்டதுடன், படையினர்களுக்கும் உள்ளூர் மக்களுக்குமிடையே நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட்டது.