Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th August 2020 22:59:13 Hours

புதிய உள்ளக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் பதவியேற்பு நிகழ்வு

உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டு அலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சாராக, கௌரவ சமல் ராஜக்ஷ அவர்கள் தனது கடமையை நாரஹேன்பிட்டயில்(நில மெதுர) உள்ள அலுவலகத்தில் வைத்து இன்று மதியம் 17 ஆம் திகதி பொறுப்பேற்றுக் கொண்டார்.

‘செத் பிரித்’ மற்றும் இந்து, கத்தோலிக்க மற்றும் இஸ்லாமிய மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் புதிய அமைச்சர் தனது கையொப்பத்தினை உத்தியோகபூர்வ ஆவனத்தில் இட்டு தனது புதிய கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார். அதன் பின்னர் குறித்த ஆவனமானது புதிய அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.

அலுவலக வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரத்ன, பாதுகாப்பு தலைமை பிரதானியும் கொவி-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பதில் பொலிஸ் மா அதிபர் திரு சந்தன விக்ரமரத்ன ஆகியோருடன் இணைந்து சமபிரதாய விளக்கினை ஏற்றி புதிய அலுவலகத்தை ஆரம்பித்து வைத்தார்.

உறவினர்கள்,அரச அதிகாரிகள்,அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் தலைவர்கள்,சிரேஷ்ட பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சில நிமிடங்களின் பின்னர்,புதிய அமைச்சர் தனது எதிர்கால நோக்கக்கூற்று தொடர்பாக எடுத்துரைத்தோடு, அமைச்சின் கீழுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேஜர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரத்ன அவர்களும் குறித்த நிகழ்வில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Running sport media | Sneakers