11th January 2024 19:46:55 Hours
இராணுவத் வழங்கல் பாடசாலையின் உபகரண கட்டுப்பாட்டாளர் பாடநெறி எண் 6 யை அண்மையில் நிறைவுசெய்த பதினைந்து உபகரண கட்டுப்பாட்டாளர்களுக்கு இலங்கை இராணுவத் தொண்டர் படையணியில் அன்புடன் வரவேற்கப்பட்டதுடன் இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் எம்கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களால் தொழில் முன்னேற்றம் தொடர்பான பாடங்கள் நடாத்தப்பட்டன.
இரண்டு நாள் விழிப்புணர்வு நிகழ்வில் ஆரம்ப உரை 03 ஜனவரி 2024 அன்று இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் துசித சில்வா கே.எஸ்.பீ அவர்களினால் ஆற்றப்பட்டது. தொண்டர் படையணியின் விதிமுறைகள், உபகரண கட்டுப்பாட்டாளர் தொழில் முன்னேற்றம், நடைமுறை மற்றும் தேர்வுகள், உணவக நெறிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை நடைமுறைகள் உள்ளிட்ட நிர்வாகங்கள் தொடர்பாக அவர்களுக்குக் கற்பிப்பதில் இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட்டது.