Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th April 2025 16:02:52 Hours

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் அதிகாரச் சின்னம் பெறல்

அன்மையில் நிலை உயர்வு பெற்ற விஜயபாகு காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் பிஎம்ஆர்ஜே பண்டார அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் 2025 ஏப்ரல் 16, அன்று இடம்பெற்ற மரியாதை நிமித்த சந்திப்பின் போது, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடம் இருந்து தனது உத்தியோகபூர்வ சின்னத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றார்.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக தேசத்திற்கு சேவை செய்த புதிய மேஜர் ஜெனரலுக்கு இராணுவத் தளபதி தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உரையாடல்களுக்குப் பின்னர், இரண்டு நட்சத்திர ஜெனரலாக நிலை உயர்வு பெற்று தனது புதிய அதிகாரத்தைக் குறிக்கும் வகையில், இராணுவத் தளபதியிடம் இருந்து, சிரேஷ்ட அதிகாரி குறியீட்டு ஜெனரல் வாளை பெற்றுகொண்டார்.