Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

31st January 2025 15:19:46 Hours

புதன்கிழமை பயிற்சித் திட்டத்திற்கு ஏற்ப ஊட்டச்சத்து அறிவியல் தொடர்பான விரிவுரை

புதன்கிழமை பயிற்சி நாள் திட்டத்துடன் இணைந்து, 4வது இலங்கை பீரங்கிப் படையணி விரிவுரை மண்டபத்தில் 2025 ஜனவரி 29 ம் திகதி அன்று "ஊட்டச்சத்து அறிவியல்" தொடர்பான சிறப்பு விரிவுரை நடத்தப்பட்டது. மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

சரியான ஊட்டச்சத்து மற்றும் சீரான உணவுப் பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் தொடர்பாக இராணுவ வீரர்களின் அறிவை மேம்படுத்துவதே இந்த விரிவுரையின் முதன்மை நோக்கமாகும். வீரர்களின் உடல் மற்றும் மன நலனைப் பராமரிப்பதில் நல்ல ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது, இது அவர்களின் செயல்திறன், சகிப்புத்தன்மை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது. உகந்த உடற்தகுதி மற்றும் இராணுவ கடமைகளுக்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக நன்கு சீரான உணவை உட்கொள்வதன் அவசியத்தை இந்த விரிவுரையில் வலியுறுத்தப்பட்டது.

மொத்தம் 07 அதிகாரிகள் மற்றும் 146 படையினர் இந்த தகவல் விரிவுரையில் பங்கேற்றனர். இந்த நிகழ்வு இராணுவ வீரர்களுக்கு உணவுக் பழக்கவழக்கங்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் அவற்றின் பயன்பாடு தொடர்பான புரிதலை விரிவுபடுத்துவதாகும்.

இந்த விரிவுரையை பனாகொடை இராணுவ மருத்துவமனையின் மேஜர் பி.ஜே.எல்.எம். குணசேகர அவர்கள் நடத்தினார். இதில் உணவு ஆரோக்கியம் தொடர்பான பல முக்கிய தலைப்புகளில் விரிவுரை நிகழ்த்திய அவர், இதில், சமச்சீர் உணவு என்றால் என்ன, சத்தான உணவின் அத்தியாவசிய கூறுகள், இராணுவ வீரர்களுக்கான உணவு பரிந்துரைகள், நீர்ச்சத்து மற்றும் அதன் முக்கியத்துவம் மற்றும் பொதுவான ஊட்டச்சத்து குறைபாடுகள் மற்றும் அவற்றின் விளைவுகள் தொடர்பாக எடுத்துரைத்தார்.