Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

15th May 2024 14:34:53 Hours

'பீல்ட் வியூ' விடுமுறை விடுதியின் திறப்பு விழா

நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட 'பீல்ட் வியூ' விடுமுறை விடுதி திங்கட்கிழமை (13) ஹபரகட பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது. நிதி முகாமைத்துவ பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

பனாகொட இராணுவ வளாகம் மற்றும் கொழும்பு பிரதேசத்திற்கு மருத்துவ சேவைகள் மற்றும் நிர்வாக தேவைகளுக்காக வருகை தரும் அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு தங்குமிட வசதிகள், ஏனைய வசதிகளை வழங்குவதற்காக இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ பொறியியல் சேவைகள் படையணி படையினரின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் 4 மாதங்களுக்குள் 'பீல்ட் வியூ' விடுதி நிர்மாணிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.