05th April 2025 12:37:30 Hours
2025 ஏப்ரல் 03, அன்று கொழும்பு 07,கிராண்ட் மிட்லேண்டில் நடைபெற்ற காலாட் பொறியியலாளர் கருத்தரங்கு – 2025 இல் பிரதி பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் கேபீஎ ஜயசேகர (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களுடன் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பிரதி பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டார். 'எதிர்காலத்திற்கு ஏற்ப மாற்றியமைத்தல்: இலங்கை பொறியியல் படையினரின் மூலோபாய அணுகுமுறைகள், வளர்ந்து வரும் புவிசார் மூலோபாய நிலப்பரப்புக்கான வரைபடம்' என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது.
வருகை தந்த பிரதம விருந்தினரான இராணுவ தளபதியை பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பொறியியல் படையணி படைத்தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜீ. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் வரவேற்றார்.
இலங்கை பொறியியல் படையணி பற்றிய ஆவணப்பட திரையிடலுடன் நிகழ்வு ஆரம்பமாகியதுடன் அதைத் தொடர்ந்து படையணி படைத்தளபதி வரவேற்பு உரை நிகழ்த்தினார். பிரதம விருந்தினர் சிறப்புரையாற்றியதை தொடர்ந்து நினைவுப் பரிசு பரிமாற்றம் மற்றும் பிரமுகர்களுடன் குழு படம் எடுத்தல் என்பன இடம்பெற்றன.
பிரிகேடியர் எப். ஜோசப் யூஎஸ்பீ தலைமையில் நடைபெற்ற முதல் அமர்வில், 'இலங்கை பொறியியல் படையணியின் எதிர்கால மூலோபாய சூழல் மற்றும் மறுசீரமைப்பு திட்டம்' என்ற தலைப்பில் கேணல் எம்.டி.ஜே. விக்ரமராச்சி யூஎஸ்பீ பீஎஸ்சீ பீடிஎஸ்சீ மற்றும் லெப்டினன் கேணல் பீ.ஏ.டி.எஸ்.டபிள்யூ. பொன்னம்பெரும யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் நடத்திய கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
இரண்டாவது அமர்விற்கு பிரிகேடியர் டபிள்யூ.எஸ். கமகே ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ என்டிசி தலைமை தாங்கினார். லெப்டினன் கேணல் ஜி.ஜி.சி.எல். குலதுங்க ஆர்எஸ்பீ பீஎஸ்சி மற்றும் லெப்டினன் கேணல் டபிள்யூ.எம்.எம்.பீ. வணிகசூரிய யூஎஸ்பீ பீஎஸ்சீ ஆகியோர் குழு உறுப்பினர்களாகப் பணியாற்றி, 'சுத்தமான இலங்கை தேசிய திட்டத்திற்கு ஆதரவளிப்பதில் தேசிய நிலைத்தன்மை மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் இலங்கை பொறியியல் படையணியின் பங்கு' என்ற தலைப்பில் விளக்கமளித்தனர்.
பிரிகேடியர் டீ.டி.பீ. சிறிவர்தன பீஎஸ்சி தலைமையில் நடைபெற்ற இறுதி அமர்வில், கேணல் ஜே.ஏ.சி.எஸ். ஜாகொட பீஎஸ்சி மற்றும் லெப்டினன் கேணல் ஜி.ஏ.டி. அல்விஸ் ஆர்எஸ்பீ பீஎஸ்சி ஆகியோர் குழு உறுப்பினர்களாக கலந்து கொண்டு, 'எதிர்கால ஐக்கிய நாடுகளின் அமைதி ஆதரவு நடவடிக்கைகள் மற்றும் எச்ஏடிஆர் நடவடிக்கைகளுக்கான வெளிநாட்டுப் பயன்பாடுகளில் இலங்கை பொறியியல் படையணி படையினரின் திறமை மற்றும் திறன்' என்ற தலைப்பில் கலந்துரையாடினர்.
பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கலுடன் கருத்தரங்கு நிறைவடைந்ததுடன் தொடர்ந்து நன்றி தெரிவிக்கப்பட்டது. முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பிற பிரமுகர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.