24th May 2023 22:56:56 Hours
இரத்மலானை இலங்கை விமானப்படை மைதானத்தில் மே 9 முதல் 23 வரை இடம்பெற்ற பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டி - 2023 ரக்பி சாம்பியன்ஷிப்பில் இராணுவ ரக்பி வீர வீராங்கணைகள் ர்கள் சிறப்பாக விளையாடினர்.
முப்படை அனைத்து அணிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிகளில் போட்டியிட்டன, ஆனால் இராணுவ மகளிர் ரக்பி அணி இறுதியில் கடற்படை அணியினரை தோற்கடித்து 12 - 00 புள்ளிகளில் தங்கப் பதக்கத்தை வென்றது. எவ்வாறாயினும், கடற்படை ஆண்கள் அணிக்கு எதிராக இராணுவ ஆண்கள் அணி 27 - 20 புள்ளிகளைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றன.
பெண்கள் பிரிவில் இராணுவ மகளிர் படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் டிசிடி லியனகே சிறந்த வீராங்கனைக்கான விருதைப் பெற்றார்.
விளையாட்டுப் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பிஎஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ பணிப்பாளர், முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இப் போட்டியை கண்டுகளித்தனர்.