26th June 2023 07:42:51 Hours
தற்போது நடைபெற்று வரும் 12 வது பாதுகாப்பு சேவைகள் விளையாட்டுப் போட்டியின் வேக நடைப் போட்டி நிகழ்வில் சனிக்கிழமை (ஜூன் 24) இலங்கை இராணுவ வீராங்கனைகள் இலங்கை இராணுவத்திற்கு ஏறக்குறைய அனைத்து பதக்கங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
இலங்கை விமானப் படையின் ஏற்பாட்டில் கட்டுநாயக்க இலங்கை விமானப்படை தளத்தில் நடைபெற்ற இப்போட்டியில் 60க்கும் மேற்பட்ட முப்படை வீர வீராங்கனைகள் போட்டியிட்டனர்.
20 கிலோமீட்டர் நடைப் போட்டியில் இராணுவ வீராங்கனைகள் 02 தங்கம், 02 வெள்ளி மற்றும் 01 வெண்கலப் பதக்கத்தை வென்றதுடன் இலங்கை விமானப்படை வீராங்கனைக்கு பெண்களுக்கான வெண்கலப் பதக்கத்தை மட்டும் மிச்சப்படுத்தினர்.
இந்த நிகழ்வின் போது இலங்கை இராணுவ தடகள போட்டியின் தலைவர் மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யுஎஸ்பீ, இலங்கை இராணுவ தடகள போட்டிகளின் செயலாளர் பிரிகேடியர் விஎம்என் ஹெட்டியாராச்சி ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ, முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.
இராணுவ விளையாட்டு வீரர்களின் திறன் வெளிப்பாடுகள் பின்வருமாறு:
ஆண்கள் பிரிவு
தங்கப் பதக்கம் – சிப்பாய் பீஎச்எஸ்எல் பெர்னாண்டோ - கஜபா படையணி
வெள்ளிப் பதக்கம் - லான்ஸ் கோப்ரல் எச்எம்எஸ்ஆர் ஹேரத் - இலங்கை இராணுவ சேவைப் படையணி
வெண்கலப் பதக்கம் – சிப்பாய் ஆர்டீஎஸ்கே சம்பத் - இலங்கை சமிக்ஞை படையணி
பெண்கள் பிரிவு
தங்கப் பதக்கம் - லான்ஸ் கோப்ரல் யு.வி.கே மாதிரிகா - இலங்கை இராணுவ மகளிர் படையணி
வெள்ளிப் பதக்கம் – சிப்பாய் பீ.பி கயானி - இலங்கை இராணுவ மகளிர் படையணி