Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th March 2023 21:40:33 Hours

பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு எல்லே போட்டிகளில் இராணுவ எல்லே அணி தொடர் வெற்றி

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் 2023 மார்ச் 02-03 ம் திகதிகளில் இலங்கை இராணுவ எல்லே குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு எல்லே போட்டி - 2023 இல் பங்கேற்ற முப்படைகளின் எல்லே அணிகள் இராணுவ எல்லே அணியால் தோற்கடிக்கப்பட்டு தொடர்ந்து மூன்றாவது முறை பாதுகாப்பு சேவைகள் எல்லே சம்பியன்ஷிப்பைத் தட்டிச் சென்றது.

இறுதிப் போட்டியில் கடற்படை எல்லே வீரர்களைத் தோற்கடித்த இராணுவ வீரர்கள் இரு தொடர்களிலும் 12 மற்றும் 02 ஓட்டங்களைப் பெற்றதுடன் கடற்படை வீரர்கள் 07 மற்றும் 05 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.

இதற்கிடையில் இரண்டாவது தொடருக்கு முன்னதாக இராணுவ வீரர்களால் வழங்கப்பட்ட ‘அங்கம்பொர’ தற்காப்பு கலையின் காட்சி நிகழ்வுகள் பங்கேற்பாளர்களுக்கு குதுகலத்தினையும் பொழுதுபோக்கையும் சேர்த்தது.

இலங்கை இராணுவ எல்லே கழகத்தின் தலைவரும் மேற்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியுமான மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல இறுதிப் போட்டியைக் கண்டுகளித்ததுடன் பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

மேலும் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் எல்லே ரசிகர்களும் போட்டிகளை கண்டுகளித்தனர்.

எல்லே போட்டியில் வெற்றி பெற்ற இராணுவ வீரர்கள் பின்வருமாறு;

சிறந்த ஆட்டக்காரர்: கோப்ரல் டப்ளியூஏடி அவிஷ்க - 8 வது இலங்கை இராணுவ சேவை படையணி

சிறந்த காப்பாளர்: லான்ஸ் கோப்ரல் கேஎஸ்ஆர் பெரேரா - 1 வது இலங்கை இராணுவ சேவை படையணி

சிறந்த வீரர்: சிப்பாய் கேஎஎல் மதுஷங்க - 7 வது இலங்கை இராணுவ சேவை படையணி