28th April 2023 19:35:22 Hours
ஏப்ரல் 19 முதல் ஏப்ரல் 26 வரை இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகிய அணிகளுடன் பயிற்சியில் ஈடுபட்ட இந்திய தேசிய ரக்பி அணியினர் இறுதியாக திங்கட்கிழமை (ஏப்ரல் 24) பாதுகாப்பு சேவைகள் ரக்பி அணியுடன் இரத்மலானையில் உள்ள விமானப்படை ரக்பி மைதானத்தில் சிநேகபூர்வ போட்டியில் போட்டியிட்டனர்.
நட்புரீதியான போட்டியின் போது, பாதுகாப்பு சேவைகள் அணி 30 புள்ளிகளுக்கு எதிராக 31 புள்ளிகளைப் பெற்று வெற்றியைப் பெற்றது, இது பயிற்சி அமர்வுக்கு உற்சாகமான முடிவாக அமைந்தது. 08 இலங்கை இராணுவ ரக்பி வீரர்களும் இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை வீரர்களுடன் பாதுகாப்பு சேவை ரக்பி அணியை பிரதிநிதித்துவப்படுத்தினர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட், அணி முகாமையாளர் பிரிகேடியர் தனஞ்சய அலுதெனிய, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், கலந்து கொண்டதுடன், இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக விமானப்படைத் தளபதியும், பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு சபையின் தலைவருமான எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன அவர்கள் கலந்துகொண்டார்.