13th February 2025 08:37:39 Hours
இலங்கை இராணுவ கோல்ப் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 13 வது பாதுகாப்பு சேவைகள் கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டி 2025 பெப்ரவரி 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நுவரெலியா கோல்ப் கழகத்தில் நடைபெற்றது. இதில் முப்படைகளைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட கோல்ப் வீரர்கள் பங்கேற்றனர்.
இலங்கை இராணுவ ஆண்கள் கோல்ப் அணி பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக ஆண்கள் பிரிவில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்று சாம்பியனானது. அவர்கள் இலங்கை விமானப்படை அணியை விட 26 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.
பெண்கள் பிரிவில், இலங்கை இராணுவ பெண்கள் கோல்ப் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், இலங்கை விமானப்படை பெண்கள் கோல்ப் அணி சாம்பியன் பட்டத்தை பெற்றுக் கொண்டது. இலங்கை இராணுவ கோல்ப் அணியின் கோப்ரல் ஆர்.எம்.ஏ.எஸ். ரத்நாயக்க போட்டியின் சிறந்த பெண் வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டார். மேலும், பெண்கள் பிரிவில் லான்ஸ் கோப்ரல் கே.டபிள்யூ.வி.எஸ். விஜேகுணரத்ன மிக நீள்தூர ஓட்டப்பந்தய வீராங்கனையாகவும், இராணுவ கோல்ப் அணியின் பெண்சிப்பாய் கே.யு.என். தில்ருக்ஷி குருந்தூர ஓட்டப்பந்தய வீராங்கனைக்கான விருதையும் பெற்றுக் கொண்டனர்.
இலங்கை இராணுவ கோல்ப் குழுவின் முன்னாள் தலைவராக இந்த வரலாற்று வெற்றிக்கு அடித்தளம் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்த இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் குறிப்பிடத்தக்க சாதனைக்காக தலைவர் மற்றும் குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதியும் இலங்கை இராணுவ கோல்ப் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி. அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்கேற்றனர்.