14th July 2023 21:14:46 Hours
ஜூலை 12 முதல் 13 வரை பனாகொட இலங்கை இராணுவ உடற்பயிற்சி கூடத்தில் இலங்கை இராணுவம் ஏற்பாடு செய்திருந்த பாதுகாப்பு சேவை விளையாட்டு போட்டியில் இலங்கை இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் சிறப்பாக விளையாடினர்.
இப் போட்டியில் இராணுவ குத்துச்சண்டை வீரர்கள் 10 போட்டிகளில் 08 தங்கம் பதக்கங்களை மற்றும் 02 வெள்ளிப் பதக்கங்களை வென்று ஆண்கள் பிரிவில் சம்பியனாகினர். மேலும் இராணுவ குத்துச்சண்டை வீராங்கனைகள் 02 தங்கப் பதக்கங்களையும் 01 வெள்ளியையும் பெற்று இலங்கை விமானப்படையுடன் இணை சம்பியனாக ஆகியதுடன் மொத்தம் நான்கு போட்டிகளில் 01 வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக் கொண்டனர்.
ஆண்களுக்கான சிறந்த குத்துச்சண்டை வீரருக்கான விருந்து இராணுவ பொறியியல் படையணியின் லான்ஸ் கோப்ரல் ஆர்எம்பீ தர்மசேன அவர்களுக்கும், பெண்கள் பிரிவில் சிறந்த தோல்வியுற்ற வீரருக்கான விருது இலங்கை இராணுவ மகளிர் படையின் சிப்பாய் எம்ஜிஎம்டி தசுனிகாவுக்கும் வழங்கப்பட்டது.
இராணுவ குத்துச்சண்டை குழுவின் தலைவரும் 55 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் எம்கேயுபீ குணரத்ன ஆர்எஸ்பீ என்டியு பீஎஸ்சீ ஐஜீ, இலங்கை விமானப்படை குத்துச்சண்டை குழுவின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ஓஏஎன்எஸ் பெர்னாண்டோ ஆகியோர் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கிண்ணங்களை வழங்கினர்.
விளையாட்டு பணிப்பக பணிப்பாளர் பிரிகேடியர் பீஏஎம் பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சீ, இலங்கை இராணுவ குத்துச்சண்டை குழுவின் செயலாளர் கேணல் ஏகேடி அதிகாரி யுஎஸ்பீ, சிரேஷ்ட முப்படை அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இப் போட்டிகளை கண்டுகளித்தனர்.
இராணுவ குத்துச்சண்டை வீரர்களின் தனிப்பட்ட திறன்கள் பின்வருமாறு:
49 கிலோவுக்கு கீழ் (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் எச்எம்எல்பீ ஜயவர்தன (இலங்கை பீரங்கி படையணி) - தங்கப் பதக்கம்
52 கிலோவுக்கு கீழ் (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் ஆர்எம்பீ தர்மசேன (இலங்கை பொறியியல் படையணி) - தங்கப் பதக்கம்
56 கிலோவுக்கு கீழ் (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் பீஏஆர் பிரசன்ன (விஜயபாகு காலாட் படையணி) - தங்கப் பதக்கம்
56 கிலோவுக்கு கீழ் (ஆண்கள்) - சார்ஜன் ஆர்எம்பீகேகே ரத்நாயக்க (விஜயபாகு காலாட் படையணி) - தங்கப் பதக்கம்
81 கிலோவுக்கு கீழ் (ஆண்கள்) - லான்ஸ் கோப்ரல் வைஎஸ்பீ சுதம்ம (இலங்கை இராணுவ பொலிஸ் படையணி) - தங்கப் பதக்கம்
91 கிலோவுக்கு கீழ் (ஆண்கள்) - கோப்ரல் பீஏஆர்எஸ் ரூபசிங்க (விஜயபாகு காலாட் படையணி) - தங்கப் பதக்கம்
91 கிலோவுக்கு மேல் (ஆண்கள்) – பணிநிலை சார்ஜன் ஏஆர்பிஇ திலகரத்ன (இலங்கை இராணுவ சேவை படையணி) - தங்கப் பதக்கம்
51 கிலோவுக்கு கீழ் (பெண்கள்) – கோப்ரல் எஸ்எச் பிரியதர்ஷனி (இலங்கை இராணுவ மகளிர் படையணி) - தங்கப் பதக்கம்
57 கிலோவுக்கு கீழ் (பெண்கள்) - இரண்டாம் லெப்டினன் பிடிஆர் மெண்டிஸ் (இலங்கை இராணுவ மகளிர் படையணி) - தங்கப் பதக்கம்
75 கிலோவுக்கு கீழ் (ஆண்கள்) - கோப்ரல் டபிள்யூஏஆர் சந்தகெளும் (விஜயபாகு காலாட் படையணி) - வெள்ளிப் பதக்கம்
64 கிலோவுக்கு கீழ் (ஆண்கள்) – சிப்பாய் எல்எஸ் நயனாந்த (இலங்கை இராணுவ சேவை படையணி) - வெள்ளிப் பதக்கம்
60 கிலோவுக்கு கீழ் (பெண்கள்) – சிப்பாய் எம்ஜிஎம்டீ தசுனிகா (இலங்கை இராணுவ மகளிர் படையணி) - வெள்ளிப் பதக்கம்
69 கிலோவுக்கு கீழ் (பெண்கள்) - சிப்பாய் வைஜிஏஎம் அமரதுங்க (இலங்கை இராணுவ மகளிர் படையணி) - வெண்கலப் பதக்கம்