01st March 2024 16:36:32 Hours
2024 பெப்ரவரி 27 அன்று இடம்பெற்ற 7வது பாகிஸ்தான் இராணுவ குழுச் செயற்பாடு - 2024 போட்டியில் இலங்கை இராணுவம் வரலாற்று சிறப்புமிக்க தங்கப் பதக்கத்தை வென்றது. கடந்த கால போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை மாத்திரம் பெற்றிருந்த இலங்கை அணிக்கு இந்தச் சாதனை ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
2024 பெப்ரவரி 25 முதல் 27 வரை பாகிஸ்தானில் நடைபெற்ற இப்போட்டியில் 22 அணிகள் பங்கேற்றன. 3 அதிகாரிகள் மற்றும் 8 சிப்பாய்களைக் கொண்ட இலங்கை இராணுவக் குழு, நிகழ்வு முழுவதும் சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி, முதலிடத்தைப் பெற்றது.