Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th November 2023 21:30:19 Hours

பல்லேகலை சீறார்களின் வருடாந்த கலை விழா

பல்லேகலை 'விருகெகுலு' பாலர் பாடசாலை மாணவர்களின் வருடாந்த கலைவிழா நவம்பர் 09 ஆம் திகதி (வியாழக்கிழமை) மத்திய மாகாண கேட்போர் கூடத்தில் இடம்பெற்றதுடன், இந்நிகழ்வில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

பிரதம அதிதி சிறுமி ஒருவரினால் தாம்பூலம் வழங்கி வரவேற்கப்பட்டதுடன், கலந்து கொண்ட அதிதிகள் மங்கல விளக்கை ஏற்றி நிகழ்வினை ஆரம்பித்து வைத்தனர். நிகழ்ச்சிக்கு வண்ணம் சேர்க்கும் வகையில் பிள்ளைகள் நடனங்கள், வேடிக்கையான செயற்பாடுகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்வுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை பார்வையாளர்கள் மத்தியில் அரங்கேற்றினர்.

11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்.எம்.எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 11 வது காலாட் படைப்பிரிவின் பிரதித் தளபதி பிரிகேடியர் கே.எம்.டபிள்யூ பண்டார ஆர்எஸ்பீ, 111 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் என்.எஸ்.எஸ் டயஸ் ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் ஆசிரியர்கள், பாலர் பாடசாலை ஊழியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.