08th June 2024 22:28:51 Hours
51 வது காலாட் படைப்பிரிவு தனது இரண்டாவது பிரத்தியேகமான 'சிமிக் பூங்காவை' 07 ஜூன் 2024 அன்று திறந்து வைத்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்களை 51 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூபிஜேகே விமலரத்ன ஆர்டபிள்யூ ஆர்எஸ்பீ அவர்கள் வரவேற்றார்.
இத்திட்டம் பொதுமக்களின் வேண்டுகோளிற்கு இணங்க இராணுவத்தினரால் ஒரு மாதத்திற்குள் பூர்த்தி செய்யப்பட்டது. திரு.வாமதேவ தியாகேந்திரன் (யாழ்ப்பாணம்) மற்றும் அவரது மகள் வைத்தியர் நிலாயினி தியாகேந்திரன் (சுவிட்சர்லாந்து) ஆகியோரின் நிதியுதவியில் உள்ளூர் பொது மக்களின் நலனுக்காக இந்த உன்னத திட்டம் மேற்கொள்ளப்பட்டது.