Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th February 2023 12:01:41 Hours

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்ட காணிகள் பொதுமக்களுக்கு விடுவிப்பு

75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகம், இதுவரை இராணுவத்தின் பாதுகாப்பு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்த 80.14 ஏக்கர் அரச சார்பற்ற காணிகளை யாழ். மாவட்டச் செயலகத்திற்கு உரியவர்களிடம் பகிர்ந்தளிப்பதற்காக வெள்ளிக்கிழமை (3) பிற்பகல் முறைப்படி விடுவிக்கப்பட்டது.

இதன்படி, பலாலி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 12.14 ஏக்கரும், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் தெல்லிப்பளை கிராம சேவையாளர் பிரிவில் 0.72 ஏக்கரும், காங்கேசன்துறை மத்திய கிராம சேவையாளர் பிரிவில் 50.59 ஏக்கரும், மயிலட்டி வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் 16.55 ஏக்கரும் இன்று (3) விடுவிக்கப்பட்டன. பலாலி அந்தோணிபுரத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது அதற்கான முறையான ஆவணங்களை கையளிக்கப்பட்டது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் பணிப்புரையின் பேரில் யாழ்.மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் நெருங்கிய ஒருங்கிணைப்பில் யாழ்.பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தொட்ட அவர்கள் அந்தக் காணிகள் தொடர்பான ஆவணங்களை யாழ். மாவட்டச் செயலாளர் திரு, அ. சிவபாலசுந்தரம் அவர்களிடம் கையளித்தார்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி அவர்கள் ஆரம்ப உரையை நிகழ்த்தியதுடன் நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து விருந்தினர்களையும் வரவேற்றதைத் தொடர்ந்து அன்றைய நிகழ்ச்சி ஆரம்பமானது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. டக்ளஸ் தேவானந்த, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அங்கஜன் இராமநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. எம்.ஏ.சுமந்திரன், கௌரவ. வடமாகாண சபையின் முதல்வர் கந்தையா சிவஞானம், வடமாகாண பிரதம செயலாளர் திரு எஸ்எம் சமன் பந்துலசேன சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் எனப் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அந்த ஆவணங்களைப் பெற்றுக்கொண்ட மாவட்டச் செயலாளர், பாதுகாப்புப் படையினருக்கு நன்றி தெரிவித்ததுடன், குடாநாட்டில் பொதுமக்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்குமான நல்லுரவை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.

அந்தந்த பிரதேச செயலாளர்கள், 51, 52, மற்றும் 55 வது காலாட் படைபிரிவுகளின் தளபதிகள், யாழ் பிரதி பொது பொலிஸ் அத்தியட்சகர், 515 வது காலாட் பிரிகேட் தளபதி, பலாலி விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி, அரச அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பயனாளிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

குடாநாட்டில் பாதுகாப்பு படையினர் எதிர்பின்றி கடந்த காலங்களில் அந்த காணிகளை சட்டரீதியான உரிமையாளர்களுக்கு விடுவிக்கும் நடைமுறையினை மேற்கொண்டனர். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் காணப்பட்ட மேற்படி காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.