19th July 2023 18:49:03 Hours
பாரிஸில் நடைபெற்ற பரா தடகள உலக சாம்பியன்ஷிப் 2023 இல் பங்கு பற்றிய இலங்கையின் தடகள வீரர்கள் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்புக்கு மத்தியில் புதன்கிழமை (19) நாடு திரும்பினர்.
இலங்கை தேசிய பரா சம்மேளனம் மற்றும் இராணுவ பரா சம்மேளனத்தின் அதிகாரிகள் அவர்களை வாழ்த்த வருகைதந்திருந்தனர். தேசிய அணியில் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி, மூன்று பரா தடகள வீரர்கள் பெரிஸ் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றனர். இதில் கஜபா படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரி 1 டி. பிரியந்த (மருத்துவ ரீதியாக வெளியேறியவர்) மற்றும் தேசிய பரா சம்மேளனத்தின் இராணுவ பொலிஸ் படையணியின் பணிநிலை சார்ஜென் கேஏஎஸ் துலான் ஈட்டி எறிதல் எப்-46 மற்றும் எப்-44 பிரிவுகளில் முறையே வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
இலங்கை இராணுவ பரா சம்மேளனத்தின் உப தலைவரான பிரிகேடியர் ஜேபி விதானச்சி, தேசிய பரா சம்மேளனத்தின் தலைவர் கேணல் தீபால் ஹேரத் (ஓய்வு), தேசிய பரா சம்மேளனத்தின் அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் அந்த பரா விளையாட்டு வீரர்களை வரவேற்றனர்.