27th January 2025 10:19:17 Hours
பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒப்புதலின் கீழ் இலங்கை இராணுவ தளபதியின் வழிகாட்டுதலின் கீழ், 9 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி படையினர், குருநாகல் மாவட்ட மெல்சிரிபுர பன்சியகம கிராமிய வைத்தியசாலையின் கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தனர்.
இந்த திட்டம் 2022 ஜூன் 26 ம் திகதி தொடங்கப்பட்டதுடன், விஜயபாகு காலாட் படையணி மற்றும் இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் மேற்பார்வையுடன் இத் திட்டத்தை முடிக்க தங்கள் உதவியை வழங்கினர். கட்டி முடிக்கப்பட்ட இக்கட்டிடம் 2024 டிசம்பர் 31 ம் திகதி வைத்தியசாலை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது, இத்திட்டம் இப்பகுதியில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.