25th June 2024 18:51:49 Hours
யாழ். ஜீனியஸ் மற்றும் கிளிநொச்சி ஜீனியஸ் அணிகளுக்கிடையிலான பனை சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதலாவது சுற்றுப் போட்டி கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் 23 ஜூன் 2024 அன்று நடைபெற்றது. யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 28 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூகத்தில் தோழமை உணர்வை வளர்ப்பதை நோக்கமாக கொண்டு யாழ்.மாவட்ட செயலாளர் மற்றும் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ஆகியோருடன் இணைந்து இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இப் போட்டியில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார். கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், அரசாங்க அதிபர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டு முயற்சி சமூக உணர்வை வளர்ப்பற்கு சான்றாக அமைந்தது.
யாழ். மற்றும் கிளிநொச்சி அரச அதிகாரிகள், இராணுவம் மற்றும் சிவில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் அரச திணைக்களத் தலைவர்கள், முப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோரைக் கொண்டு கிரிக்கெட் அணிகள் உருவாக்கப்படிருந்தன.
கிரிக்கட் போட்டியின் முதலாவது போட்டியில் கிளிநொச்சி ஜீனியஸ் அணி வெற்றியீட்டியதுடன், வெற்றியாளர்களுக்கு 51,52 மற்றும் 55 வது காலாட் படைப்பிரிவு தளபதிகள், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி ஆகியோர் பரிசுகள் மற்றும் பனை சவால் கிண்ணத்தை வழங்கி வைத்தனர். கிரிக்கட் போட்டியின் இரண்டாம் கட்ட போட்டி யாழ்ப்பாணத்தில் விரைவில் நடைபெறும்.
ஏராளமான இராணுவத்தினர் மற்றும் சிவில் சமூகத்தினர் இப்போட்டியை ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். 55 வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி விடுதலை நிலையத்தில் நடைபெற்ற மதிய உணவுடன் நிகழ்வு நிறைவுற்றது.