14th May 2024 22:02:09 Hours
உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி மற்றும் அடிப்படை நீச்சல் பாடநெறியின் 2024 ஆம் ஆண்டின் 1 வது தொகுதிக்கான NVQ நிலை 4 சான்றிதழ் வழங்குதல் 07 மே 2024 அன்று பனகொடை இராணுவ வளாக இராணுவ உள்ளக அரங்கில் நடைபெற்றது. மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை கவச வாகன படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஸ்டபிள்யூஎம் பெர்னாண்டோ டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பின்வரும் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்கள் பாடநெறியின் போதான சிறப்பு விதிவிலக்கான திறன்களை வெளிப்படுத்தினர்:
அதிகாரிகள் உயர் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி - எண் 17
சிறந்த மாணவர் - இலங்கை கவச வாகன படையணியின் லெப்டினன் டி.எம்.எம்.எல்.கே பண்டார
சிறந்த உடற்தகுதி - விஷேட படையணியின் லெப்டினன் டி.பீ. ஏக்கநாயக்க விதிவிலக்கான சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தினார்.
சிறந்த உடற்பயிற்சி வீரர் - விஜயபாகு காலாட் படையணியின் லெப்டினன் ஆர்எம்டியூ பிரேமசிறி
சிறந்த விளையாட்டுத்திறன் - இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் இரண்டாம் லெப்டினன் ஆர்.எம்.ஏ.எரந்த
உயர் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி - எண் 47
சிறந்த மாணவர் - விஷேட படையணியின் லான்ஸ் கோப்ரல் பீஆர்பீ பெரேரா
சிறந்த உடற்தகுதி - இலங்கை சிங்கப் படையணியின் சிப்பாய் ஆர்எம்எஸ்எஸ் விஜேரத்ன
சிறந்த பிரிவு கட்டளையாளர் - இலங்கை சமிக்ஞை படையணியின் கோப்ரல் டி.எம்.டபிள்யூ.டபிள்யூ. திசாநாயக்க
சிறந்த விளையாட்டுத்திறன் - விஜயபாகு காலாட் படையணியின் காலாட் சிப்பாய் ஐபீஎம்என் செனவிரத்ன
உதவி உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறி – எண் 131
சிறந்த மாணவர் - கமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் டபிள்யூ.எச்.எம் பிரேமகுமார -.
சிறந்த உடற்பயிற்சி வீரர் - இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் காலாட் சிப்பாய் ஆர்ஏடி ஜயசேன
சிறந்த உடற்தகுதி - இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் சிப்பாய் ஆர்எல் குமார்
சிறந்த விளையாட்டுத்திறன் - கமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் ஜே.எல்.ஆர்.ஜயலத்
சிறந்த பிரிவு கட்டளையாளர் - இலங்கை சிங்கப் படையணியின் கோப்ரல் எம்.எச்.என் வீரரத்ன
அடிப்படை நீச்சல் பாடநெறி எண் 167
சிறந்த நீச்சல் வீரர் மற்றும் சிறந்த மாணவர் - கமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் கே.டி.எஸ்.டி ஜெயசிங்க.
சிறந்த பிரிவு கட்டளையார் - விஷேட படையணியின் கோப்ரல் என்.கே மகேஷ் குமார -
விடுகை அணிவகுப்பில், உடற் பயிற்சி (உயர் திறன்கள்), ஏரோபிக் மற்றும் நிராயுதபாணி போர் திறன்களை மாணவர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்கள் வெளிப்படுத்திய வசீகரிக்கும் கண்காட்சி கலந்து கொண்ட அனைவரின் பாராட்டையும் பெற்றது. பயிற்சியாளர்களின் தனிப்பட்ட
திறமைகளை பிரதம விருந்தினர் பாராட்டினார்.
இலங்கை இராணுவத்தின் திறன்களை மேம்படுத்துவதில் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளர்களின் முக்கிய பங்கை வலியுறுத்திய பிரதம அதிதி, இந்த மதிப்புமிக்க பதவியுடன் வரும் பொறுப்புகளை எடுத்துரைத்தார்.