30th March 2023 23:02:21 Hours
54 வது காலாட் படைப்பிரிவின் 541 வது காலாட் பிரிகேடின் 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி படையினர் கிராம மக்கள் மற்றும் படையினருக்கிடையில் நல்லிணக்கத்தையும் தோழமையையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் பிரதேசத்திலுள்ள உள்ளூர் அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ காற்பந்தாட்டப் போட்டியை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) கத்தளம்பிட்டி விளையாட்டு மைதானத்தில் நடாத்தினர்.
இலுப்புக்கடவை, அந்தோணிபுரம் மற்றும் கல்லியடி பிரதேசங்களை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 4 அணிகள் இப்போட்டியில் பங்குபற்றியிருந்தன. இறுதியில் அந்தோணிபுரம் ஏ மற்றும் பி அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
இறுதிப் போட்டியில் அந்தோணிபுரம் - பி அணிக்கு எதிராக 1-0 என்ற கோல் கணக்கில் அந்தோணிபுரம் - ஏ அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. பிரதம அதிதியாக 541 வது காலாட் பிரிகேட் தளபதி கேணல் வருண கமகே கலந்து கொண்டு வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார். 12 வது (தொ) இலங்கை பீரங்கி படையணி கட்டளை அதிகாரியான மேஜர் ஏஏஎஸ் அமரதுங்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பெருந்திரளான உள்ளூர் பார்வையாளர்கள் இறுதி போட்டிகளை கண்டுகளித்தனர்.
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பகர ரணசிங்க மற்றும் 54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நலிந்த நியங்கொட ஆகியோர் இந்நிகழ்விற்கு தமது ஆசிகளை வழங்கினர்.