30th August 2023 19:50:32 Hours
திருகோணமலை 4 வது கவச வாகனப் படையணி, சனிக்கிழமை (ஓகஸ்ட் 26) தமது படையினருக்கு 'ஒழுங்கமைப்பு ஊடான படையினரின் வினைத்திரன்' என்ற கருப்பொருளின் விரிவுரை ஒன்றை ஏற்பாடு செய்தது.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும், இலங்கை இராணுவப் பொதுச் சேவைப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டபிள்யுடபிள்யுஎச்ஆர்ஆர்விஎம்என்டிகேபி நியங்கொட ஆர்டபிள்யுபீ ஆர்எஸ்பீ விஎஸ்வி யுஎஸ்பீ என்டியு பீஎஸ்சி அவர்கள் இந்நிகழ்வில் பிரதம அதிதி பேச்சாளராக கலந்து கொண்டார்.
'ஒழுங்கமைப்பு ஊடான படையினரி்ன் வினைத்திரன்' என்ற தலைப்பு, வேலைப் பயிற்சியின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது. விருந்தினர் விரிவுரையாளர் பாரம்பரியமற்ற அச்சுறுத்தல்களால் வரையறுக்கப்பட்ட தற்போதைய பாதுகாப்புச் சூழலில், கட்டளைக்கு உட்பட்ட படையினர்களின் பண்புகள் மற்றும் வரம்புகளைப் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் கவச வாகன பிரிகேட் தளபதி, உளவியல் செயற்பாடுகள் பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.