19th April 2023 20:50:14 Hours
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 62 வது காலாட் படைப்பிரிவின் 622 வது காலாட் பிரிகேட் படையினர், 2023 ஏப்ரல் 7 தொடக்கம் 9 வரையில் இலங்கை இளைஞர் ஆய்வுப் பயணத்தில் ஆறு பாடசாலைகளின் வருடாந்த கூட்டு முகாம் திட்டத்தை நடாத்துவதற்கு படையினர் தங்களது ஆதரவை வழங்கினர்.
கெபித்திகொல்லேவ மத்திய கல்லூரி, கண்டி வித்தியார்த்த கல்லூரி, கண்டி மகாமாய பெண்கள் கல்லூரி, கண்டி ஹில்வுட் பெண்கள் கல்லூரி, கொழும்பு விசாகா வித்தியாலயம், பின்னவல மத்திய கல்லூரி, கேகாலை, அங்கும்புர வேலுவன மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 147 மாணவர்கள் மற்றும் 60 ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கொச்சியாகலை வனப் பகுதியில் உள்ள உயிரியல் பன்முகத்தன்மையை ஆராய்வதற்காக 3 நாள் முகாம் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
இத் திட்டமானது 62 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்ஏஜேஎன் ரணசிங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசி அவர்களின் நெருக்கமான ஒருங்கிணைப்பில் 623 வது காலாட் பிரிகேட் தளபதி பிடிஆர் புதகொட யூஎஸ்பீ அவர்களின் வழிக்காட்டிலின் கீழ் 5 வது (தொ) கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டிஎஸ்வைஎல் குருவிட்ட அவர்களின் மேற்பார்வையின் கீழ் 5 வது (தொ) கஜபா படையணியின் 17 படையினர் கொண்ட குழுவினரால் திட்டத்திற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டன.