28th November 2024 11:38:11 Hours
57 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டப்ளியூஎம்பீஎம் விஜேசூரிய ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டலின் கீழ் 571 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையில் 1 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணி படையினர் 2027 நவம்பர் 2024 அன்று நம்புவாவ, ரஸ்நாயக்கபுரவில் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிகளை வழங்கினர். அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், வெள்ளத்தில் மூழ்கிய நம்புவெவ கிராமத்தில் உள்ள தனிமைப்பட்ட வீடுகளுக்கு உலர் உணவுகளை எடுத்துச் செல்ல படையினர் படகுகளை வழங்கினர்.
அதே தினம், 143 வது காலாட் பிரிகேட் தளபதியின் மேற்பார்வையின் கீழ், 16 வது கஜபா படையணி படையினர் அனுராதபுரம்-புத்தளம் சிரம்பியடியாவில் பிரதான வீதியின் குறுக்கே வீழ்ந்த பாரிய மரத்தை அகற்றி, போக்குவரத்தை சீர்செய்து, பொதுமக்களுக்கான .இடையூறுகளை குறைத்தனர்.