07th June 2023 21:27:28 Hours
அம்பாந்தோட்டை நகரவெவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 3500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு 'பொசன்' பௌர்ணமி தினத்தை முன்னிட்டு (ஜூன் 3) அதன் தலைமையகத்திற்கு அருகில் 12 வது காலாட் படைப்பிரிவு படையினரால் அன்னதானம் வழங்கப்பட்டது.
இப் பணியானது 12 வது காலாட் படைப்பிரிவின் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை ரன்ன வர்த்தகர் சங்கத்தினால் ஜூன் 3-5 ஆம் திகதிகளில் ஹம்பாந்தோட்டை ரன்ன நகரில் ஏற்பாடு செய்யப்பட்ட பொசன் வலயத்திற்கு 12வது படைப்பிரிவினர் உதவிகளை வழங்கினர்.