08th May 2023 22:05:30 Hours
நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி மற்றும் செல்லகந்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெள்ளிக்கிழமை (5) அவசர வெள்ள மீட்பு நடவடிக்கைகளின் பின்னர் 141 வது காலாட் பிரிகேடின் 2 வது (தொ) இராணுவ சேவைப் படையணியின் படையினர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் 400 உணவுப் பொதிகளை வழங்கினர்.
வெள்ளிக்கிழமை (5) நண்பகல் அந்த பகுதிகளில் பெய்த கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்ட பெரியவர்கள், நோயாளிகளை படையினர் சில மணிநேரங்களில் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர்.
அவர்களின் எதிர்பாராத இக்கட்டான நிலை குறித்து கவலை கொண்ட படையினர் நண்பகலில் அவர்களுக்கு 50 மதிய உணவுப் பொதிகளை வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
இருப்பினும், நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் படையினர், மாலையில் மேலும் 350 இரவு உணவுப் பொதிகளைத் தயாரித்து, வெள்ள நீர் பெருக்கி ஏற்பட்ட அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல், அவர்களின் வீட்டு வாசலுக்குச் சென்று வழங்கி வைத்தனர்.
முந்தைய நாள், 03 அதிகாரிகள் மற்றும் 23 சிப்பாய்கள் 20 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றினர், வெள்ள நீர் பெருக்கம் காரணமாக சிக்கித் தவித்த பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர். மேலும் பத்து நபர்களுக்கு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் தேவையான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்கேடிபி புஸ்ஸல்ல ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, 14 வது காலாட் படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஜேஎன்ஆர்என்கே ஜெயமான்ன ஆர்டபிள்யூபீ, 141 வது காலாட் பிரிகேட் தளபதி எல்ஜிபி காரியவசம் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ, ஆகியோர் அவசரகால மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கினர்.
மேலும், 2 வது (தொ) இலங்கை இராணுவ சேவைப் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் ஆர்ஏ உடரடகே, அவர்கள் அவசரகால மீட்பு பணியில் ஈடுபட்ட படையினர்களை மேற்பார்வையிட்டார்.