29th April 2023 21:06:10 Hours
காங்கேசன்துறையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க திஸ்ஸ விஹாரையில் புனரமைக்கப்பட்ட தூபியில் கலசம் வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (27) இடம்பெற்றது.
யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் டிபிஎஸ்என் போதொட்ட ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ பீஎஸ்சி சுப நேரத்தில், மகா சங்கத்தினரின் 'பிரித்' பாராயணங்களுக்கு மத்தியில் கலசத்தை வைத்தார்.
திஸ்ஸ விகாரையின் பிரதமகுருவான வண. கிந்தோட்டை நந்தராம தேரர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் முயற்சிக்கு அமைய இந்த விகாரை மீள் நிர்மாணிக்கப்பட்டது.
பண்டைய திஸ்ஸ விகாரையின் வரலாறு கி.பி 3 ஆம் நூற்றாண்டில் தேவநம்பியதிஸ்ஸ மன்னனால் கட்டப்பட்ட ஒரு பௌத்த விகாரையாக விளங்குகிறது.
மகாசங்கத்தினர், அதிகாரிகள், சிப்பாய்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சமய வைபவம் சிறப்பாக இடம்பெற்றது. யாழ். பாதுகாப்புப் படையினரின் அயராத முயற்சியால் இந்த தூபியின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்தன.